search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் இணைப்பு"

    • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
    • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

    இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

    பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

    20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    • 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன

    கருங்கல் :

    பாலூர் அருகே பரவ விளை முதல் கல்லடை செல்லும் இணைப்பு சாலை சுமார் 10 வருடங்கள் முன்பு போடப்பட்டது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இச்சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாலூர் ஊராட்சி சார்பில் மேற் கண்ட சாலையின் நடுப் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவ தற்காக குழி தோண்டி குழாய்கள் பதித்துள்ளனர். இதனால் சாலை முழு வதுமாக சேதம டைந்துள் ளது.

    சாலை முழுவதும் சகதி நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்து ரோட்டோ ரமாக குடிநீர் குழாயை அமைப்பதோடு, சாலையை சீரமைத்து தார்போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதி
    • ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் யூனியன், தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022-23-ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் காற்றாடிதட்டு குக்கிராமத்தில் 61 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. 9 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் ஆதாரம் உள்ளது. இன்று கலைசெல்வி மற்றும் கிருஷ்ண தங்கம் ஆகியோ ரது வீடுகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஆதாரத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சென்னை நகரின் பழைய பகுதிகளிலும் ஒரு சில இடங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் இன்னும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.
    • குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத இந்த பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தெருவில் உள்ள தொட்டியில் ஊற்றி விடுவார்கள்.

    சென்னை:

    சென்னை பெருநகரோடு 2011-க்கு பிறகு புதிதாக சேர்ந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. புதிதாக இணைந்த திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன.

    ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது பணிகள் நடந்து வருகிறது. புதிதாக இணைந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் தெருக்களில் கடைசி பகுதி வரை செல்வது இல்லை. மேடான பகுதிகளுக்கு தண்ணீர் போகாததால் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தினமும் 420 லாரிகளில் இதுபோன்று வினியோகிக்கப்படுகிறது.

    இது தவிர சென்னை நகரின் பழைய பகுதிகளிலும் ஒரு சில இடங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் இன்னும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. 80 சதவீதம் பகுதிகள் மட்டுமே குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளன. குடிசைப் பகுதிகளுக்கு 8000 தொட்டிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத இந்த பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று தெருவில் உள்ள தொட்டியில் ஊற்றி விடுவார்கள். அதில் இருந்து பொதுமக்கள் குழாய்களில் பிடித்து செல்கிறார்கள்.

    இதுபோல தினமும் 859 தெருக்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் 2200 நடைகள் தண்ணீர் இலவசமாக லாரிகள் வழியாக சப்ளை செய்யப்படுகிறது.

    இதற்கிடையில் ஆன்லைன் வழியாக 'டயல் புக்கிங்' செய்யும் முறை தினமும் 900 லாரிகள் குடிநீருக்காக பதிவு செய்யப்படுகிறது.

    பணம் செலுத்தி குடிநீர் பெறும் இந்த முறையில் 450 லாரிகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பதிவாகிறது. மீதமுள்ள 450 லாரிகள் சென்னையின் மத்திய பகுதியில் இருந்து புக் ஆகிறது.

    சென்னை நகருக்குள் பணம் செலுத்தி லாரியின் மூலம் குடிநீர் பெறும் வீடுகள் எத்தனை உள்ளன? எதற்காக லாரியில் தண்ணீர் வாங்குகிறார்கள். அவர்களுக்கு தேவை என்ன? நகருக்குள் இன்னும் எத்தனை வீடுகள் குடிநீர் இணைப்பு இல்லாமல் உள்ளது என்பதை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    தற்போது 10 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. எந்தெந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்காமல் உள்ளது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.

    குடிநீருக்கு பணம் செலுத்தி புக்கிங் செய்யும் வீடுகளை கணக்கெடுத்து முழுமையான ஆய்வு நடத்தி அந்த பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது,

    சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. லாரிகள் மூலம் சப்ளை செய்வதை குறைத்து எந்தெந்த வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை என்பதை கணக்கெடுத்து அந்த பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

    • வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
    • குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது

    ஊட்டி,

    கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போா் வரி இனங்களை சரியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கூறி வந்தது. வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ராஜகோபாலபுரம் மற்றும் ஓ.வி.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகளை ஆணையா் உத்தரவின் பேரில் நகராட்சி குடிநீா் விநியோகப் பணியாளா்கள் துண்டித்தனா். 

    • வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
    • ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உரிய நேரத்தில் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் வரி செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி 1-வது மண்டலத்தில் 6, 2-வது மண்டலத்தில் 16, 3-வது மண்டலத்தில் 9, 4-வது மண்டலத்தில் 15 என மொத்தம் 46 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் சரியான நேரத்தில் வரிகளை செலுத்தி, குடிநீர் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    • சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம்
    • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோபர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி வரி வசூல் செய்வதில் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    இதனால் பல்வேறு நலத்திட்டங்கள் மாநக ராட்சிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களை கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்வதில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல மையங்கள் திறக்கப்பட்டு விடுமுறை நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் உத்தர விட்டுள்ளார். நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோடு கோணம் பகுதியில் ராதா கிருஷ்ணன் என்பவர் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாமல் உள்ளார். அதனை தொடர்ந்து ஆணையரின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, ஆல்டிரின், சேகர், பிட்டர் ஜஸ்டின், தேவகுமார் மற்றும் உதவி வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள், ராதா கிருஷ்ணன் வீட்டிற்கு செல் லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    மாநகராட்சிக்கு ஆண்டிற்கு இரு முறை வரி செலுத்தும் வகையில் மாதங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையும் அக்டோ பர் முதல் மார்ச் வரையும் என இருமுறை பிரிக்கப் பட்டுள்ளது.

    இதில் முதல் அரை யாண்டில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள்ளும் 2-வது அரையாண்டில் அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் கண்டிப்பாக வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும். செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்த னர்.

    • சிவகாசி பகுதியில் வருகிற 28-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    சிவகாசி

    நகராட்சியாக இருந்த சிவகாசி 2021-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சொத்து வரி உயா்வு, நகராட்சி கணக்குகளை இணைத்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி வசூலில் காலதாமதம் ஏற்பட்டது.

    சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் வரி இனங்கள் மறு சீரமைப்புக்கு பின் கடந்த செப்டம்பா் மாதம் வரி வசூல் தொடங்கியது. உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    2021-22-ம் நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலை யில் அந்த ஆண்டு வரி வசூல் நிலுவை ரூ.7.70 கோடி உள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டிற்கான வரி வசூல் தற்போது வரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இதனால் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வருகிற 28-ந் தேதிக்குள் செலுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் வரி செலுத்தாமல் உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் வருகிற மாா்ச் இறுதிக்குள் 100 சதவீத% வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

    • வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, குத்தகை இனம் நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சொத்துவரி, குடிநீர் கட்டணம் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி வரி பாக்கி வைத்திருந்ததால் 4-வது மண்டலத்தில் 8 குடிநீர் இணைப்புகளையும், 1-வது மண்டலத்தில் 7 குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரேநாளில் ரூ.51 லட்சத்து 11 ஆயிரத்து 977 வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.

    • வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    • ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் ஆதிநாராயணன் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் 60 குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், குடிநீர் குழாயை திறந்து வைத்தார்.இதைத்தொடர்ந்து தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பிரபு சங்கர், மற்றும் குடியிருப்பு வாசிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

    ×